இலங்கையிலும் ஒரு ஹிட்லரும் ஒரு சார்லி சப்ளினும் உள்ளனர்- ஹரீன்

200 0

இலங்கைக்கு என ஒரு ஹிட்லரும் ஒரு சார்லிசப்ளினும் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து  கறுப்புசால்வை அணிந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹிட்லரும் சார்லிசப்ளினும் மீசைவைத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.


இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஆனால் வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் உலகை அழவைத்தார் சார்லிசப்ளின் உலகை சிரிக்கவைத்தார்.
இலங்கையிலும் இதேபோன்றவர்கள் உள்ளனர் இதன் காரணமாக மக்கள் அச்சமடைவது இயல்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.