கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

241 0

கொழும்பில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முகக்கவசம் அணிவதுடன் , உரிய சுகாதார விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

அதற்கமைய , முகக்கவசம் அணியாதவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது , மேல்மாகாணத்தை விடுத்து , நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கவசம் அணியாதவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது , இன்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களில் 2400 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.