நாளை உழவர் திருநாள்-சுகாதார விதிமுறைகளைப் பேண அறிவுறுத்து!

40 0

தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பொங்கல் கொண்டாடப்படவுள்ளது

இந்நிலையில், உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்களை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, விசேஷட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையின் காரணமாக நீண்ட விடுமுறை கிடைப்பதால், அனைவரும் தத்தமது வீடுகளிலேயே அதனைக் கொண்டாடுமாறு குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான விசேட குழு கொழும்பில் 11 இடங்களில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் என அவர் கூறியுள்ளார்.