சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு 18 ஆம் திகதி வரை நீடிப்பு

218 0

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV தனியார் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரையில் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.