முல்லைத்தீவில் தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

390 0

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் உள்ள தனியாரின் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற பெண்ணொருவர், அக்காணியில் அமைந்துள்ள மண் கிணற்றில் குறித்த எச்சங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர் மனித எச்சங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் பிரசன்னமாகியுள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்தில் பொலிஸ் சீருடையிலோ ஆயுதம் தாங்கிய பொலிஸாரோ இல்லாத நிலையில், சிவிலுடையில் பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்தும் சிலர் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் குறித்த நபர்கள் எச்சங்கள் இருக்கும் பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்று நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.