மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பு புதிய அரசியலமைப்பு தேவை – சரத் வீரசேகர

180 0

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடத்தக்கூடாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பல சந்தர்ப்பங்களில் மாகாண சபை தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் மாகாண சபை முறைமை தொடர்பான புதிய சட்டங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஒன்பது வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதிமுறைகளை செயற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாகாண சபை முறையை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகவே நடைமுறையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.