நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள கட்சினா மாகாணம் கங்கரா என்ற இடத்தில் அரசு ஆண்கள் பாடசாலைக்குள் சில தினங்களுக்கு முன் துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மாணவர்கள் 450 பேரை கடத்தி சென்றனர்.

இதனையடுத்து கடத்தி செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் பொலிஸாரும் இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந் நிலையில் சம்பரா மாகாணத்திலுள்ள ருகு காட்டுப்பகுதியில் மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உடனடியாக, காட்டுப்பகுதியை சுற்றி வளைத்த நைஜீரிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளில் பிடியிலிருந்த 344 மாணவர்களை மீட்டுள்ளதாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

