வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளடங்களாக வட மாகாணத்தில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

