வடக்கு மாகாணத்தில் நிர்வாக சேவைத் தரம் சித்தியெய்திய அதிபர்களுக்கு மாற்றம்

317 0

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வாக சேவை தரச் சித்தி எய்திய
பின்னரும் தொடர்ந்தும் அதிபராகப் பணியாற்றியவர்கள் உடனடியாக நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட கல்வி வலயங்களில் வடமராட்சி மற்றும் வலிகாமம்
ஆகிய இரு கல்வி வலயங்களிலும் மூவர் இவ்வாறு அதிபராகப் பணியாற்றிய நிலையில் நேற்று முன்தினம் முதல் உடனடியாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பணியாற்றிய 3 பாடசாலைகளின் அதிபர் வெற்றிடத்துக்கு உடன் விண்ணப்பம் கோரப்படுகின்றது.

இவ்வாறு அதிபராகப் பணியாற்றியோர் கல்வி நிர்வாக சேவை தரம் IIஇல் தற்போது
உள்ளமையோடு, கல்வி நிர்வாக சேவைக்கான தகுதியைப் பெற்று 5 ஆண்டு காலம்
பூர்த்தியானமையால் அவர்களில் ஒருவர் வாகன அனுமதிக்கும் விண்ணப்பித்த
நிலைமையை ஆராய்ந்த வடக்கு மாகாண பிரதம செயலாளர், அதன் பின்னர் வழங்
கிய பணிப்பின் பெயரிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.