ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை ஒரு வருடத்திற்குள் மாறும்

296 0

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கட்சியின் அரசியலமைப்பிலும் ஜனநாயக அமைப்பு இணைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் குறித்த அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்றும், பதவியில் இருந்த ஒரு வருடத்திற்குள் கட்சியின் தலைமையை மாற்ற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.