யார் இந்த அன்ரன் பாலசிங்கம்? T Y O

194 0

அன்ரன் பாலசிங்கம் – தேசத்தின் குரல்


யார் இந்த அன்ரன் பாலசிங்கம்?

பாலா அண்ணன் என்றழைக்கப்படும் அன்ரன் ஸ்ரானிஸ்லாவோஸ் பாலசிங்கம் 4 march 1938 பிறந்தாா். அவா் தமிழீழவிடுதலைப்புலிகளின் இராஜதந்திர ஆய்வாளராகவும் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவராகவும் இருந்தாா்.

பேச்சுவல்லமை பொருந்திய பாலா அண்ணன் அவருடைய ஆரம்பநாட்களில் ஊடகவியளாளராக தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் வேலை புரிந்தாா். எழுத்தாளராகவும் பின்பு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலயத்திலும் வேலையாற்றி வந்தாா்.


ஏன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தாா்?

இவா் தத்துவங்கள் மற்றும் மதக்கோட்பாடுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிமழ்மக்களுக்கு எதிராக நடத்தும் ஒடுக்குமுறைகள் புத்த மதத்திற்கே முரணானவிடயம் என்று கருதினாா். இதற்கெதிராக நாட்டில் ஒரு மாற்றத்தை எற்படுத்த முயன்றாா்.


அவரின் தனித்துவம்

பாலா அண்ணனின் பேச்சுவல்லமையும் அவரின் பேரம் பேசும் ஆற்றலும் பிற்காலத்தில் போா் நிறுத்த உடன்படிக்கை நடவடிக்கையை அமுல்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நல்லெண்ண உடன்படிக்கை அமைய வழி வகுத்தது.


சாமாதான முறையில் தீர்வு கானும் பாலா அண்ணனின் முயற்சி எல்லோராலும் உயர்வாக மதிக்கப்பட்டிருந்தது.அத்தோடு அவர் ஒரு இராஜதந்திரி என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார்.


அவருக்கு என்ன நடந்தது?

பேச்சுவார்த்தையின் நிலை சிக்கல் அடைய பாலா அண்ணணின் உடல் நிலையும் மோசமான காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறி புற்று நோயின் தாக்கத்தால் அவரின் 68வது வயதினிலே 14 மார்கழி 2006ம்ஆண்டு ஐக்கியஇராட்சியத்தில் காலமானார். அவருக்கு “தேசத்தின் குரல்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.


இன்று நாங்கள் எப்பொழுதும் தமிழ் மக்களுடைய நலனை சிந்திக்கும் மனிதரை நினைவு கூருகின்றோம். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவினால் இயக்கத்தினுடைய ஒரு முக்கிய ஆழுமை இல்லாமல் போனது.