தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள்-யேர்மனி

390 0

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாள் இன்றாகும். இந் நினைவு கூரல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மண்டபங்களுக்குள் நிகழ்வை நடாத்தமுடியாத சூழல் இருந்தபோதும் யேர்மன் எசன் நகரத்தில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவுத்தூபியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

‘தேசத்தின் குரல்’ என மகுடம் சூட்டப்பட் டுள்ள அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல்வேறு வடிவில் உல கிற்கு அறியப்பட்டவர். ஒரு ஊடகவிய லாளராக, ஒரு படைப்பாளியாக, ஒரு தத் துவ ஆசிரியராக, ஒரு இராஜதந்திரியாக, ஒரு விடுதலை அமைப்பின் ஆலோசகராக, இவையாவற்றிற்கும் மேம்பட்டதாக ஒரு பண்பட்ட மனிதராக அவர் அடையாளம் காணப்பட்டவர். இதுவே அவரை ‘தேசத்தின் குரல்’ என்ற உயர் நிலைக்கு உயர்த்தியது.