பம்பலப்பிட்டியவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

330 0

கொழும்பு, பம்பலப்பிட்டிய கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (13) பகல் கரையொதுங்கியுள்ளது.

கடலில் நீராடசென்றவேளை இவர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணி இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பில் பம்பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.