வேட்டையாடப்படும் விலங்குகளும் பறவைகளும்

230 0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாரைகள் மற்றும் பெரிய வகை கொக்குகள் என்பன இங்கு வருகின்றன. இவ்வாறு வருகின்ற வலசைப் பறவைகளையே இனந்தெரியாத நபர்கள் இரவில் வேட்டையாடுகின்றனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கு, மயில், மற்றும் விலங்குகளும் சுடப்படுகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பிரதேசங்களுக்கும் அங்குள்ள சிறிய நீர் நிலைகளை நோக்கியும் அதிகளவில் பறவைகள் வந்து சென்றன. ஆனால் தற்போது அவை மிகவும் குறைந்து விட்டது எனவும் வருகின்ற ஒரு சில பறவைகளையும் வேட்டையாடி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கையினை மேற்கொண்டு பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்குமாறு அப்பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.