ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் டிசம்பர் 14-ந்தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

325 0

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் ஆலோசனைக் கூட்டம் டிச.14-ல் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. ஆட்சி செய்து வரும் அதிமுக, பா.ஜனதாவுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
தேர்தல் பணிகளை துரிதப்படுத்த அதிமுக மாவட்டங்களை பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை அறிவித்தது. கடந்த மாதம் 20-ந்தேதி அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டசபை தேர்தலுக்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி ஓபிஎஸ்-ஈபிஸ் தலைமையில் டிசம்பர் 14-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப்போது பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.