டாக்டர் அம்பேத்கரின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தியவர்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

