வேளாண் சட்டங்களுக்கு எதிராக 10ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்

334 0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 10ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் வரும் 8-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சார்பில் நடத்தும் முழு அடைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 10ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.