பாம்புகளைத் தன் மீது தீண்ட வைத்து வலியை அளவிடும் இளைஞர்!

488 0

அமெரிக்காவைச் சேர்ந்த  டேவின் ஓரின் (David Orin ) என்ற இளைஞர் பாம்புகளைத் தன் மீது தீண்ட வைத்து வலியை அளவீடு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த குறித்த இளைஞர் பாம்புகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாம்புகள் கடிக்கும் போது ஏற்படும் வலிகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதற்காக தனது உடல் பாகங்களில் பாம்புகளை கடிக்க வைக்கும் அபாயகரமான செயலில் இறங்கியுள்ளார். பாம்புகள் மட்டுமின்றி பச்சை இக்வானா வகை ஓணான்களையும் தனது உடலில் கடிக்க வைத்து பார்ப்பவர்களுக்கு அச்சத்தை டேவிட் ஓரின் ஏற்படுத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.