கொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு

243 0

கொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.