கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான வர்த்தமானி அறிவிப்பை சவால் செய்து வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்க கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

