துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் மஹரகம சமீர கைது

233 0

பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பிரதான நபரான மஹரகம சமீர எனும் ருக்‌ஷான் சமீர மதுசங்க என்பவர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு லால் என்பவரின் பிரதான உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து ரஷ்யாவில் தயாரித்த மைக்ரோ வகை துப்பாக்கி ஒன்று, 8 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் 6 மற்றும் அமெரிக்காவில் தயாரித்த ரம்போ கத்தி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.