தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 84 பேர் கைது

304 0

சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

குறித்த அனைவரும் முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்போது 18 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளும் மற்றும் அடுலுகம பிரதேசத்தில் 9 கிராம சேவை பிரிவுகளும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, அலவத்த பிரதேசத்தில் 2 கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளில் மக்கள் நடமாடுவதை  முடிந்தளவு குறைத்து கொள்ளுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில்  744 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.