தலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சி நாள் விழா – மதுரவாயல் | சீமான் வாழ்த்துரை

263 0

நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – மதுரவாயல் | நாம் தமிழர் கட்சி

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, தமிழர் எழுச்சி நாள் விழா இன்று 26-11-2020 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மதுரவாயல் மின்சார வாரிய அலுவலகம் அருகில் அமைந்துள்ள CV Mini Hall கூட்ட அரங்கில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு, குருதிக்கொடை பாசறை சார்பாக வழங்கப்படும் ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துரையாற்றினார்.