மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

302 0

ntlrg_20161207060655646720மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

சோ.ராமசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இறக்கும் போது அவருக்கு வயது 82.

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது புகழ் பெற்ற ஒருவராவார்.

மேலும், சோ ராமசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதேடு, அவரின் சிறந்த ஆலோசகாக இருந்து வந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், சோ ராமசாமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.