முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது நாளாக இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
அவர் நேற்றைய தினம் 6 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது நாளாக இன்று குறித்த ஆணைக் குழுவில் முன்னிலையாகுமாறு ஆணையம் தெரி வித்தமை குறிப்பிடத்தக்கது.

