கிழக்கு மாகாணத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை இராணுவத்தினர் நேற்று நடுகை செய்தனர்.

இத்திட்டம் கிழக்கிலுள்ள இராணுவத்தின் பாதுகாப்பு படை தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வனவளத் திணைக்களம் இதற்காக மீ, கும்புக், புளி, வேம்பு, தேக்கு மற்றும் மஹோகனி உட்பட 100,000 மரக்கன்றுகளை வழங்கி பங்களிப்பு செய்திருந்தது.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இந்த மரக்கன்றுகள் வளர உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

