இளம் தொழில் முனைவோருக்கான காணிக்கு தென்மராட்சியில் மட்டும் 13ஆயிரம் பேர் விண்ணப்பம்

352 0

ஒரு லட்சம் இளம் தொழில் முனைவோருக்குக் காணி வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்
ணப்பத்துக்கு யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


ஒரு லட்சம் இளம் தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் முகமாக அரசாங்கத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு கடந்த 16 ஆம் திகதி முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணிகளைப்பெற்றுக்கொள்வதற்காக தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 311 இளையோர் விண்ணப்பங்களைக் கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது.