கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, சில வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை, கல்லேல்ல, கந்தகாடு மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
புதிதாக சிறைச்சாலைகளுக்கு அழைத்து வரப்படும் கைதிகளே இவ்வாறு தொற்றுக்குள்ளாவதாகவும்;; அவர் தெரிவித்துள்ளார்.

