குமரியில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபானங்கள் விற்பனை நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்கள் போன்றவற்றில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

