கடலூர் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தது தொடர்பாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர் சுரேஷ் குமார். இவர் பணிமுடிந்து வெளியே வந்தபோது கைதிகள் அறை வளாகத்துக்குள் 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் மந்தாரகுப்பத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு சுரேஷ்குமார் கஞ்சா சப்ளை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ் குமாரை சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

