மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்!

231 0

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.

அத்தோடு, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் கடந்த 11 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தின் பல இடங்கள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.