பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சு, சுகாதார அதிகாரிகள் மாவட்ட வலய கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 23ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
பாடசாலைகளை பாதுகாப்பாக ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

