பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற்செய்கை

297 0

பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் சிறந்த அறுவடை கிடைத்ததால் விசாயிகள் பெரும்போகச் செய்கையில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நெற்செய்கைக்குத் தேவையான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் மேலும் தெரிவித்தார்.