மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களை கண்டறிய விசேட திட்டம்!-அஜித் ரோஹன

352 0

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை கண்டறிவதற்காக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு   கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மீறி   மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு  கடந்த  11 ஆம் திகதி  நள்ளிரவு முதல்  எதிர்வரும் 15 ஆம் திகதி   நள்ளிரவு வரை தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே  மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும்  தெரிவித்துள்ளார்.