கொவிட்-19 கொரோனா தொற்றாளராக யாசகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் படி குறித்த நபர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த வர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த நபர் செயற் பட்டமையே அடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரி சோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பை மேற் கொண்ட மேலும் 8 யாசகர்களை நிட்டம்புவ தனிமைப் படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

