சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமைச்சர் தவறியதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட தாகத் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத் திட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

