தீபாவளி பண்டிகை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

328 0

இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுகாதார பிரிவினரால் சில பரிந்துரைகள் முன்வைக் கப்பட்டுள்ளது.

அதன் படி இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடும் மலையமக்கள் மற்றும் இந்து சமூகத்தினரிடையே கோவிட் -19 கொரோனா தொற்று பரவாமல் எவ்வாறு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது என்பது குறித்து சுகாதார பிரிவால் இந்து மதத் தலைவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் உட்பட இந்து மத மக்களுக்குச் சுகாதார ஆலோசனைகள் மற்றும் சுகாதார பரிந் துரைகளை வழங்கச் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாட்டின் தற்போதைய கொவிட்-19 கொரோனா தொற்று நிலைமையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்கள் பின்வரும் சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழி காட்டி களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு இந்து மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தீபாவளி பண்டிகை காலங்களில் நல்ல மன நிலை யில் இருக்க வேண்டும் மற்றும் பண்டிகை காலங் களில் இந்து ஒருவரேனும் கொரோனா தொற்றால் பாதிக் கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.

மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் தற்போது இருக் கும் இடத்திலே தங்கியிருக்க வேண்டும்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உங்கள் அன்புக்குரியவர்களுக் குத் தொற்று பரவுவதைத் தவிர்க்கவும்.

அதிக தூர இடங்களுக்குச் செல்லாமல் தீபாவளி பண் டிகையை வீட்டில் கொண்டாட வேண்டும்

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர் களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும்.

கோயில்கள், சமூகங்கள் மற்றும் தோட்டங்கள் ஆகிய இடங்களில் மத விழாக்கள் நடத்த வேண்டாம்.

எரியக்கூடிய ஆல்கஹோல் கை சுத்திகரிப்பு திரவங் களைப் பயன்படுத்தி கை விளக்குகளை ஏற்ற வேண்டாம்.

மத வழிபாடுகளுக்கு முன்பும் பின்பும் சவக்காரம் இட்டு தண்ணீரினால் கைகளைக் கழுவ வேண்டும்.

கைகுலுக்கல் மற்றும் கட்டிப்பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்தல் வேண்டும். வணக்கம் அல்லது வேறு வழியிலோ வாழ்த்துவது பொருத்தமானது.

இந்த பண்டிகை விருந்தின் போது மதுபானம் மற்றும் புகைத்தலை தவிர்க்க வேண்டும் .

 

இந்த தீபாவளி பண்டிகை சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி கொண்டாடுவது கொவிட் -19 கொரோனா தொ ற்று பரவுவதைத் தடுக்க உதவும், மேலும் பொறுப்புடன் பாதுகாப்பாகச் செயற்படுங்கள்! இந்த தீபாவளி பண் டிகையை புதிய முறையில் கொண்டாடுவோம்! என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.