விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டர் வழக்கு தள்ளுபடி

478 0

george-masterதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டரின் வழக்கை கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது கொழும்பு நீதிமன்றம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன் இருந்த காலத்தில் அவர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டருக்கு எதிராக 2009ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து ஜோர்ச் மாஸ்டரை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டரின் விசாரணையை கொழும்பு நீதிமன்ற நீதவான் டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். ஜோர்ச் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகிய இருவரும் ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment