நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
2019- 2020-ம் ஆண்டுக்கான போனஸ் 10 சதவீதம் என்பதை தன்னிச்சையாக அறிவித்ததைக் கண்டித்தும், உடனடியாக தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தக்கோரியும், பண்டிகை முன்பணம் வழங்கக்கோரியும், சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக் கோரியும் இந்த போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ஸ்டான்லி ராபர்ட், துணைத்தலைவர் லியோ, எல்.பி.எப். தலைவர் பால்ராஜ், பொருளாளர் கனகராஜ், எச்.எம்.எஸ். லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் ஆறுமுகம்பிள்ளை, டி.டி.எஸ்.எப். தலைவர் பத்மநாபபிள்ளை, எம்.எல்.எப். பொதுச்செயலாளர் சிவகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். எல்.பி.எப். பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, சி.ஐ.டி.யு. செயல்தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் தங்கமோகனன், எம்.எல்.எப். மாநில செயலாளர் சந்திரன் உள்பட பலர் போராட்டத்தை விளக்்கி பேசினர்.
போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

