சிறிலங்காவில் மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று!

334 0

சிறிலங்காவில் மேலும் 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 108 ஆதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்து 590ஆக அதிகரித்துள்ளது.