காலியிலுள்ள மீனவ சமூகத்திலுள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை அவசியம் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தொற்று நோயியல் நிபுணரும் வைத்தியருமான சிங்காராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “காலி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் குறைந்தபட்சம், ஒரு பி.சி.ஆர்.சோதனைக்காவது உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும், குறித்த மீனவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் சுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மீனவர்கள், மீன்பிடித் துறைமுகங்களுக்குள் நுழைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதில் மீன்பிடி சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும்,சில மீன்பிடி சமூகங்கள் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எதிர்காலத்தில், மீனவர்களின் தகவல்களை மீனவர் சங்கங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களிடமிருந்து பெறவும், பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத மீனவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

