கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை உருவாகியுள்ளது! – ஹேசா விதானகே

358 0

நோய்த் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இதனால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

நாட்டில்  கொரோனா தொற்று பரம்பல் தொடர்பிலான மெய்யான நிலைமையையும், அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சவால் குறித்த நீண்ட கால தீர்வுத் திட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சர் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகவும் குறுகியகால தீர்வுகளே வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் வல்லமை அரசாங்கத்திடமிருந்து கை நழுவிவிட்டதா என அவர் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.