தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார்

342 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார்.

குறித்த கர்ப்பிணி தாய் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலேயே குழந்தை பெற்றுள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒரு வர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண் டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.