க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது – பரீட்சை ஆணையாளர் நாயகம்

439 0

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்களில் 3இலட்சத்து 62ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் இம்முறை உயர்தரப் பரீட்சையை எழுதியுள்ளனர்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர பரீட்சை 22 நாட்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும், பல்வேறு தடைகளை மீறி பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் பரீட்சை ஆணை யாளர் நாயகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.