கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது- எல்.முருகன் குற்றச்சாட்டு

295 0

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியதாவது:

கடவுள் முருகனின் துணைகொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம்.

கடவுள் முருகனுக்கு யார் யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த வேல் யாத்திரை. கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுகவும், மு.க.ஸ்டாலினும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் எல்.முருகன் திருத்தணி புறப்பட்டார்.

தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க காரில் திருத்தணிக்கு சென்று அவர் கொண்டிருக்கிறார்.