ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் இரண்டாயிரத்து 393 பேர் கைது

312 0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகியே பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது 18 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக மொத்தமாக இரண்டாயிரத்து 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 356 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.