இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் இயக்குநர் ஃபாரிஸ் ஹடாட் ஸெர்வோஸ் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒரு சந்திப்பில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இலங்கையின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஆண்டுகளாக நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு புதிய அரசாங்கத்தின் கீழும் தொடரும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

