ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன் – சுகாதார அமைச்சர்

258 0

கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடவுளின் அருனை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயலை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஆற்றுநீரில் பானையை வீசிய சுகாதார அமைச்சரின் செயல் குறித்து விமர்சனங்கள் கேலிசெய்யும் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.


இதனை நியாயப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சர் கடவுளின் அருளை பெறுவதற்காகவே தான் அதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை கடவுளின் அருளை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடதயராவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உறுதியான பௌத்த பிரஜை என்ற அடிப்படையில் நான் பௌத்த போதனைகளையும் சடங்குகளையும் நான் பின்பற்றுகின்றேன் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கைகளில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது நடவடிக்கைகளை விமர்சித்தமைக்காக சமூக ஊடகங்களை அவர் கண்டித்துள்ளார்.