பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினரால் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

216 0

இலங்கையில் முதல் முதலாக வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை ஆராய்ச்சி குழு தயாரித்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த முகக்கவசத்தில் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.

குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம்.

இந்நிலையில் நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசத்தை வழங் கியமை குறிப்பிடத்தக்கது.