சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து பலி- திருகோணமலையில் சம்பவம்

345 0

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனு மதிக்கப்பட்டதையடுத்து உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல்- கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரியதர்ஷன என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரி ழந்துள்ளதாகத் திருகோணமலை பொது வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.